Amirtha Yogam

Amirtha Yogam Song Lyrics In English


அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

உலகினிலே ஒரு புதுமை இது உனக்கென பிறந்திட்ட பதுமை பழகிவிட்டால் இதன் மகிமை வயிறு பசியும் எடுக்காத இளமை இனி பழகிவிட்டால் இதன் மகிமை வயிறு பசியும் எடுக்காத இளமை இன்பம் தரும் கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா

அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

நீ கனிந்த காதலின் விருந்து அது கவலை தீர்த்திடும் மருந்து ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து மெய்க் காதல் வாழ்விலே இணைந்து ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து மெய்க் காதல் வாழ்விலே இணைந்து இன்பம் தரும் உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே


அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா

நிகரிலா பருவ தாகம் தணிய நீந்துவோம் இன்ப லோகம் இனி இணையில்லாத சுக யோகம் இதுதானே வாழ்வின் அனுராகம் இனி இணையில்லாத சுக யோகம் இதுதானே வாழ்வின் அனுராகம் இன்பம் தரும் உன்னாலே மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா