Anbe Thilagam

Anbe Thilagam Song Lyrics In English


அன்பே திலகம் அழகே திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம் நாயகன் நீயொரு வீரத்திலகம் இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம்

ஆஹா நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம் எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம்

அன்பின் திலகம் பண்பின் திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம்

லல லா லல லாஆஅ ஆஅஆ லா லல லா ஆஅ

நிறம் மாறி விடும் பூக்கள் மறைந்தோடி விடும் நாட்கள் மாறாத மறையாத திலகம் இது நிலம் வானம் உள்ள காலம் நிழல் போல உன்னை நாளும் நீங்காத உறவாடும் இதயம் இது

அழகான ஆலயம் நம் வீடு அதில் வாழும் அம்பிகை நீ தினந்தோறும் தேவனின் பேர் சொல்லி மனம் பாடும் கீர்த்தனையே ஸ்ருதியோடு லயம் போல சேர்ந்தேன் நான்தானே


அன்பின் திலகம் பண்பின் திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம்

தமிழ் மூன்று வகையாகும் அதைப் போல இங்கு நாமும் நான் ஒன்று நீ ஒன்று மகன் ஒன்றுதான் நமை சேர்ந்ததொரு பிள்ளை நடைப் போட்டு வரும் கிள்ளை மகனல்ல மணம் வீசும் மலர்ச்செண்டுதான்

பிறை போலே பிள்ளையும் வளர்ந்தாலே வருங்காலம் பௌர்ணமியாகும் ஒருபோதும் தேய்பிறை காணாது உலவும் நம் வெண்ணிலவு மகன் வாழ மனை வாழ பாடும் பூங்காற்று

அன்பே திலகம் அழகே திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம் நாயகன் நீயொரு வீரத்திலகம் இந்த நாயகி நீ கொஞ்சும் வஞ்சித் திலகம்

ஆஹாஹ நான் தந்து நீ வைத்த நெற்றித்திலகம் எந்த நாளும் என் வாழ்வுக்கு வெற்றித் திலகம் அன்பின் திலகம் பண்பின் திலகம் என்றும் நீதான் எந்தன் உலகம்