Azhagathane Aagume

Azhagathane Aagume Song Lyrics In English


பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை அதற்க்கு இல்லை எல்லையே அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட அரட்டைகள் தொல்லை ஓஒ அரட்டைகள் தொல்லை

பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை அதற்க்கு இல்லை எல்லையே அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட அரட்டைகள் தொல்லை ஐயோ அரட்டைகள் தொல்லை

பெண் : வட்டமே இடுவார் வீட்டைச் சுற்றியே வயது வந்தவளைக் காண்பதற்கே இவ் வயது வந்தவளைக் காண்பதற்கே வீணாக உயிரை வாங்கிடுவார் விவாகமேதான் சுகமே என்றால் வரதட்சணையே வேண்டும் என்பார் எப்படி வாழ்வதம்மா நானேதான் எப்படி வாழ்வதம்மா

ஓஒகண்ணான தங்கமே கண்ணாட்டி நீயே ஒண்டியே நீயே இருப்பது ஏனோ ஒண்டியே நீயே இருப்பது ஏனோ உன்னுடன் சேரவே நானிருக்கேனே என்னுடன் கூடியே இன்புறு நீயே எனைக் கண் பாரேன் மனதாலே

பெண் : ஓஓஒ துஷ்டனே தனிமையில் திரியும் முரடனே சளைத்தவள் என்றே தேடி சரசமோ காதல் மீதே காதல் கொள்ளாதே சஞ்சல சித்தனே போ போடா வஞ்சனை செய்யாதே போ போ போ வஞ்சனை செய்யாதே போ போ போ

ஆண் : ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே ராணியே செய்வேனே மகராணியே செய்வேனே மகராணியே செய்வேனே ஆஸ்திகள் பாஸ்திகள் தருவேனே ஆசைகளெல்லாம் தீர்த்திடுவேன் ஆனந்தமாகவே நீயே வா

பெண் : ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம் ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம் நில வளம் எல்லாம் நல்லா இருக்கா காதல் ராணிகள் சுகமேதானா

ஆண் : படுதாவின் உள்ளே பெண்களை மூடி அடிமைகள் ஆக்கி பார்த்திடுவீர் கை பொம்மைகளாகவே செய்திடுவீர் உன் பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம் போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு


ஆண் : ஓஓஒதளுக்கி மினிக்கியே தங்கப் பதுமையே எந்தனிடம் வா வா பந்து விளையாடவா சொந்தமுடன் வா வா சிங்காரி நீ வா சௌகார்கள் நாங்கள்தான் அந்த கடவுளுக்கும் தான் அஞ்சிட மாட்டோம்

ஆண் : கேளடி உனக்கே கொட்டுவேன் தங்கம் கட்டுவேன் மாடியே கட்டித் தங்க தூணிலே கண் இமைப் போலே காத்திடுவேனே கண்ணே பயமேன் பொன்னான கிளியே

ஆண் : எந்நாளும் செய்வேன் சேவை நான் செய்வேன் நான் செய்வேன் நான் நீ கை விட்டாலே சாவேன் நான் சாவேன் நான்

பெண் : ஓஓ சௌக்காருங்களா சலாம் ஐயாவே கள்ளக் கடைகள் பெரும் குஷிதானா கொள்ளை பணமே மலையாய் குவிந்ததா விலைகளை உயர்த்திட வறுமை வந்திடவே கபகபவென வயிறு பற்றி எரியாதா உம் வயிறு குளிரவே குதித்திடுவீர்

பெண் : உங்க பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம் போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு

பெண் : ஓஓ உழுதுண்ணும் ராஜா வா வா நீ வா வா பூர்வ பூஜா பலனே நீயே ராஜா கள்ளம் கபடம் இல்லாத ராஜா எல்லாம் வளமையும் செய்திடும் ராஜா படைத்தேன் உனையே வல்லமை ராஜா வரித்தேன் தெய்வமாய் உனையே ராஜா

பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த விவசாயி மகள் மணமகள் ஆகினாள் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த விவசாயி மகன் மணமகன் ஆகினான்