Chinna Mulla Thottivida

Chinna Mulla Thottivida Song Lyrics In English

டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில்

வாழவா எனை ஆளவா அட என்னென்று நான் சொல்ல இது இன்றைக்கு நேற்றல்ல என் ரத்தத்தின் கேள்விக்கு முத்தத்தில் பதில் சொல்ல வா வா

சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில்

உன் மேனி பார்த்தும் உள்ளூர வேர்த்தும் பொன் மாலையில் என்னாசையை நான் மூடினேன் ஜாமத்தில் உந்தன் நாமத்தை சொல்லி கட்டில்தனில் கட்டாயமாய் கண் மூடினேன்

நீரூற்றி குளித்துவிட்டேன் அணையவில்லை நெருப்புக்கு உறக்கமில்லை நீயெந்தன் அருகிருந்தும் தவிக்கவிட்டால் ஆண்மைக்கு அழகு இல்லை சந்தர்ப்பத்தில் யாரும் இங்கே ராமனில்லை ஹான்

சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில்

உன்னோடு வாழும் ஒரு நாளும் போதும் என் மேனியும் என் பெண்மையும் மோட்சம் பெறும் அன்போடு பேசும் ஐ லவ் யூ போதும் ஆஹா அந்த ஓர் சொல்லும் லட்சம் பெறும்

அது என்ன ரகசியமோ அதிசயம் இதுவரை அறியவில்லை ஆஹாஹா அவஸ்தைகள் அதில் சுகமோ விடுகதை புரியவில்லை பதமாகவே சொன்னாலென்ன பாடங்களை ஆஹ்