Edhai Ninaithom

Edhai Ninaithom Song Lyrics In English


எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னேஏஹே
உண்மை நாம் உணர்ந்தோம்

எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னே
உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத்தான்
அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால்
வாழ்க்கை தொல்லையே

ஆசையைத்தான்
வென்றவன் இல்லையே
அதை இன்றுதான்
உணர்ந்ததென் பிள்ளையே

புதுப் புது ஏக்கம்
அளித்திடும் தினம் தினம்
தூக்கம் கெடுத்திடும்

மனதினை திறந்து வைக்கையில்
இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னே
உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசையில் ஏறி
மேகத்தில் போனோம்
குயில் முட்டை மேலே
காக்கைகள் ஆனோம்


புல் நுனி மீதே
தூங்கிடும் பனியை ரசித்தால்
மின்னலின் ஒளியின் மீது கொண்ட
மயக்கம் விலகிடுமே

கிடைத்ததை எண்ணி
வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால்
ஜன்னலின் கதவைத் தீண்டி
புதிய வெளிச்சம் வீசிடுமே ஏ

எதை நினைத்தோம்
அதை அடைந்தோம்
அடைந்த பின்னேஏஹே
உண்மை நாம் உணர்ந்தோம்

ஆசைக்குத்தான்
அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால்
வாழ்க்கை தொல்லையே

ஆசைக்குத்தான்
அளவுகள் இல்லையே
அதைத் தொடர்ந்தால்
வாழ்க்கை தொல்லையே

ஓ ஓஒ ஓஒ
தரா ரா ரா தரா ரா ரா