என் ஜன்னல் நிலவுக்கு பாடல் வரிகள்

Starring Vijayakanth, Soundarya
Movie Chokka Thangam
Music ByDeva
Lyric By Pa. Vijay
SingersSadhana Sargam, Hariharan
Year 2003

En Jannal Nilavukku Song Lyrics In English

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

கண்கள் ரெண்டை உருட்டி
மிரட்டி கொஞ்சுகின்ற
அழகே குங்குமத்தில் புரட்டி
எடுத்த குண்டுமல்லி சரமே
மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்க

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா குங்குமத்தில் புரட்டி
எடுத்த குண்டுமல்லி சரமா மந்த மாருதம்
எந்தன் மேனியில் பூத்திருக்கு

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும்
எத்தனை வேகம் உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும்


கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே
பத்து விரல் போதாது உன் மோகமே
லட்சம் விரல் நீ கொண்டு வா வானமே

என் முத்துமணி சுடர் முல்லை மலர்திடல் நாணுவதேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

முக்கனி அதில்
முக்கியம் கொண்ட முதல்
கனி முதல் கனி பார்த்துவிட்டேன்

பத்தினி பெண்ணின்
பத்தியம் தேட ஓரிடம் ஓரிடம்
வேர்த்துவிட்டேன்

பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது
என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது

தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது
என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது

உன் வெள்ளை மனசிலும்
வெட்க சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு
கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா குங்குமத்தில் புரட்டி
எடுத்த குண்டுமல்லி சரமா மந்த மாருதம்
உந்தன் மேனியில் பூத்திருக்க

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

En Jannal Nilavukku Song Lyrics from movie Chokka Thangam. En Jannal Nilavukku song sung by Sadhana Sargam, Hariharan. En Jannal Nilavukku Song Composed by Deva. En Jannal Nilavukku Song Lyrics was Penned by Pa. Vijay. Chokka Thangam movie cast Vijayakanth, Soundarya in the lead role actor and actress. Chokka Thangam movie released on 2003