Enna Nadakudhu

Enna Nadakudhu Song Lyrics In English

பாடலாசிரியர் : கருணாகரன்

என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி

பயணம் இருக்குது பாத இல்லயே பாத கெடச்சதும் பலனும் இல்லயே

காயம் தான் பட்டுரிச்சி கண்ணீரும் சுட்டுரிச்சி வலிக்கு மருந்தும் இல்ல வேதன தீரவில்ல

என்ன நடக்குது சாமி ஒண்ணும் புரியல சாமி

சிறகினை விரித்தேன் ஆகாயத்தை காணவில்லை ஆகாயம் இனி வெறும் கனவோ

மண் மீது நடந்திட்டேன் சுவடினை தேடினேன் பொருந்தாத பாதம் இது எனதா

எதனை தேடி அலைகிறேன் எதனை தந்தாய் தவிக்கிறேன்

கடக்கும் நொடிகளை வலியினில் உணர்ந்தேன் தவிக்கும் மனதினை நீ தர நீ தர ஏற்கின்றேன்

விடியாத பொழுதுண்டோ விடியலை விடியலை கேட்கின்றேன் துன்பம் பொது எனில் யார் தோளில் யார் தான் சாய