Ilamaiyin Ninaivugal |
---|
இசை அமைப்பாளர் : சந்திரா போஸ்
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவி வருவாள் நெஞ்சில் ஊர்வலம்
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
ரதியே காமன் தோள் சேரும் கிளியே
அழகே ஆடும் பொன் வீணை நீ
இதழோ காதல் தேனாற்றங்கரையோ
இளமை மேகம் நீர் ஊற்றும் நாள்
ஆடும் தோளோடு தோள் சேர
பால் ஊற்றும் நிலவே
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
கனவே ஆசை பூங்காற்றின் சுகமே
மனமே சூடும் பூமாலை நீ
மடிமேல் ஆடும் பூந்தோட்டம் முகமோ
இதயம் பாடும் பூபாளம் நீ
மேனி தானாக தீயாகி போராடும் தலைவா
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மலர்களில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
லலலலலல
லலலலலல