Ilavenir Kaala Panjami

Ilavenir Kaala Panjami Song Lyrics In English


இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம் ஒரு பத்தரை மாத்து தங்க நிலாவை சந்தித்தேன் எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது

லாலா லாலலாலா

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

தூக்கம் போனது அவளை நினைத்தே ஏக்கமானது பித்தனை போலானேன் பார்க்குமிடமெல்லாம் அவளை போலே பாவை தெரிந்தது பைத்தியமாய் ஆனேன்

என்னை போலே அவளும் இருந்தால் என்று அவள் சொல்ல கேட்டு உள்ளம் எங்கோ போனது மீண்டும் மீண்டும் அவள்தான் வேண்டும் என்று எனை தூண்டும் உள்ளம் பச்சை கொடி காட்டுது

இது இன்று வந்த சொந்தமா இல்லை ஜென்ம ஜென்ம பந்தமா

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம் ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன் எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது


இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

மஞ்சள் குங்குமம் கொண்ட தேவதை எந்தன் கையிலே மங்கல நாண் கொண்டாள் திங்கள் ஆடிடும் வானம் போலவே எங்கள் வீட்டிலே மழலைகள் தான் தந்தாள்

பாட வைத்து உள்ளம் ஆடவைத்து அன்பு பாட்டு சொல்லி வீட்டில் இன்பம் தந்தவள் தேட வைத்து நெஞ்சம் வாட வைத்து என்னை சோக தீயில் வேக வைத்து போனவள்

இந்த ஏழை என்னை மணந்தாள் எந்தன் ஜீவனுக்குள் கலந்தாள்

இளவேனிற் கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி

சித்திர வானம் சித்திரம் தீட்டிடும் மேகம் ஒரு பத்தரை மாத்து தங்க நிலவை சந்தித்தேன் எங்கள் பார்வை நின்று போனது வானம் பூமி என்ன ஆனது

லாலா லாலலாலா

இளவேனிற் கால பஞ்சமி லாலா லாலலாலா அவள் வானில் வந்த பௌர்ணமி லாலா லாலலாலா