Kadhal Endral Enna

Kadhal Endral Enna Song Lyrics In English


காதல் என்றால் என்ன அதில் காணும் இன்பம் என்ன கண்ணோடு கண் கலந்து காயும் ருசியாய் கனிந்து என்னென்னமோ பண்ணுது கண்ணா மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா

காதல் என்றால் என்ன ஆஹா ஹா ஆஆஹாஹா

கனவிலும் நீயே நனவிலும் நீயே காண்பதினாலே கனிந்ததுன்னாலே காதலின் வேகம் செய்யுமோ இப்படி கன்னி சகிப்பது எப்படி காதலின் வேகம் செய்யுமோ இப்படி கன்னி சகிப்பது எப்படி என்னென்னமோ பண்ணுது கண்ணா ஹூம் என்னென்னமோ பண்ணுது கண்ணா

காதல் என்றால் என்ன ஆஹா ஹா ஆஆஹாஹா


தூணிலும் நீயே துரும்பிலும் நீயே தோன்றுவதேனோ மாயை இதானோ தூக்கமில்லாம ஏங்குது மனசு சொன்னா கேக்குதா வயசு தூக்கமில்லாம ஏங்குது மனசு சொன்னா கேக்குதா வயசு என்னென்னமோ பண்ணுது கண்ணா ஹூக்கும் என்னென்னமோ பண்ணுது கண்ணா

காதல் என்றால் என்ன அதில் காணும் இன்பம் என்ன கண்ணோடு கண் கலந்து காயும் ருசியாய் கனிந்து என்னென்னமோ பண்ணுது கண்ணா மனசை என்னென்னமோ பண்ணுது கண்ணா

காதல் என்றால் என்ன ஆஹா ஹா ஆஆஹாஹா