Kadhalukku Thoodhu Solli |
|---|
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
ஆஆஅஆஆஆ ஆஹ்ஆஆஆஆஆஆ
காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம் கன்னி இவள் நெஞ்சம் உன் கைகளிலே தஞ்சம் ஒரு காவல் இன்றி வேலி இன்றி வாடும் எந்தன் உள்ளம்
காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி
ஏஏஹேஹே ஆஆஆஅஹ்ஆஅஆஆ
காலம் செய்த கோலம் காவல் வைத்தார் உன்னை நேரம் வந்து சேரும் நம்மை ஒன்று சேர்க்கும் தேவன் இன்றி தேவி இல்லை கோயில் கொண்ட தெய்வம்
தேடி வந்து காக்கும் என்று பூஜை செய்தேனே யாரோ செய்த வஞ்சம் ஏனோ வந்த பாவம் தானே அது போகும் தர்மம் என்றும் வாழும் இன்றும் என்றும் உண்மைக் காதல் வெல்லும் என்றே சொல்லி
காதலுக்கு தூது சொல்லி வா வா இளம் காற்றே எந்தன் காதலனைத் தேடி
மேகம் மூடும் போது நிலவின் ஒளி எங்கே பூட்டி வைக்கும் உண்மை வெளியில் வரும் அன்பே நீயும் அங்கே நானும் இங்கே சேரும் தினம் எங்கே நீதி இங்கே நேர்மை அங்கே நியாயம் வராதோ
கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போமோ சட்டம் சொல்வதாலே உதயம் நின்று போமோ இன்றும் என்றும் உண்மைக் காதல் வெல்லும் என்றே சொல்லி