Karuppa Irukkattum

Karuppa Irukkattum Song Lyrics In English


ஆஆஏஏஹே

கருப்பா இருக்கட்டும் அவ செகப்பா இருக்கட்டும் கலையா இருக்கட்டும் அவ செலையா இருக்கட்டும் அரசனா இருக்கட்டும் ஆண்டியா இருக்கட்டும் கவர்னரா இருக்கட்டும் கலெக்டரா இருக்கட்டும்

டாக்டரா இருக்கட்டும் வக்கீலா இருக்கட்டும் நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும் கடவுளா இருக்கட்டும் டோய்

லவ் இல்லைன்னா ம்ம் லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

கருப்பா இருக்கட்டும் அவ செகப்பா இருக்கட்டும் கலையா இருக்கட்டும் அவ செலையா இருக்கட்டும்

கண்ணுல வெதைக்கிற நெஞ்சிலே மொளைக்கிற காதலும் சுகம் தானடா இது வசதி பாக்காம ஜாதி பாக்காம மனசில் உருவாகும்டா ஹோய்

ஹோய் கொட்டுற பணத்துக்கும் கட்டிலு சொகத்துக்கும் காதல் ஈடாகுமா இங்கு வயசு வந்தாலும் வயசு போனாலும் காதல் கலையாதம்மா

உலகினில் காதல் உசுரா இருக்கு இறக்கிற மனுஷனின் பிறப்பாய் இருக்கு மனசுல வருகிற மயக்கம் இது மரணத்திற்கப்பாலும் இருக்கும்

வீட்டுக்கு வீடென இருக்கும் இது வேம்புக்கு இனிப்பத்தான் கொடுக்கும் அட கண்ணில்ல காதில்ல மூக்கில்ல வாயில்ல ஆனாலும் இது ஜொலிக்கும்ஹோய்ஹோய்

லவ் இல்லைன்னா ஹாஹ் லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

கருப்பா இருக்கட்டும் அவ செகப்பா இருக்கட்டும் கலையா இருக்கட்டும் அவ செலையா இருக்கட்டும்


பாகிஸ்தான் இந்தியா காதல் செஞ்சுட்டா சண்டைகள் இருக்காதடா அந்த சிங்களம் தமிழன காதல் செஞ்சுட்டா ரத்தமும் ஓடாதடா

நெல்லையும் மதுரையும் காதல் செஞ்சுட்டா பஸ்கள் எரியாதடா அந்த ஈராக் அமெரிக்கா காதல் செஞ்சுட்டா யுத்தம் வெடிக்காதுடா

செவிடனும் கூட காதல கேட்பான் குருடனும் கூட காதலப் பார்ப்பான்

முதலில் வருவதும் காதல் அட கடைசியில் இருப்பதும் காதல் முதலில் வருவதும் காதல் அட கடைசியில் இருப்பதும் காதல்

அட உன்னால என்னால தன்னால கண்ணால வளருது இந்தக் காதல்

லவ் இல்லைன்னா லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா

கருப்பா இருக்கட்டும் அவ செகப்பா இருக்கட்டும் கலையா இருக்கட்டும் அவ செலையா இருக்கட்டும் அரசனா இருக்கட்டும் ஆண்டியா இருக்கட்டும் கவர்னரா இருக்கட்டும் கலெக்டரா இருக்கட்டும்

டாக்டரா இருக்கட்டும் வக்கீலா இருக்கட்டும் நானா இருக்கட்டும் நீயா இருக்கட்டும் கடவுளா இருக்கட்டும் டோய்ஹாஹ்

லவ் இல்லைன்னா லைப் இல்லைடா லவ் பண்ணி நீ வாழ்ந்து பாரடா