Konji Konji Muthamidum

Konji Konji Muthamidum Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்

கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை

கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள்

ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை

இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை

கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை

தன்னைப் பற்றி ஒரு நினைவும் இல்லை இந்த நெஞ்சில் துயரம் இல்லை பிள்ளை உள்ளம் எங்கே தொல்லை இல்லை அங்கே

பட்டம் பெற்று வரும் அறிவோ மாயம் பட்டப் பின்பு வரும் அதுதான் ஞானம் உண்மை என்ன என்று பெண்மை கண்டதின்று


கானல்கள் எல்லாம் கங்கைகள் என்று நீராட போனால் என்னாவது நீராட போனால் என்னாவது இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை

கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை

சொந்தமென்று ஒரு சிறையைப் பார்த்தேன் பந்தமென்ற ஒரு விலங்கை போட்டேன் அதோ அந்த வாழ்க்கை இதோ இன்று மாயை

அன்று தொட்டு வரும் வழிதான் எல்லாம் இன்று மட்டும் இது புதிதா என்ன கதை அல்ல மானே இதோ சாட்சி நானே

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள் பெண் ஜென்மம் வாழும் நாள் எந்த நாள்

இந்த இருவருக்கும் நான் அன்னை இன்று புரிந்துக் கொண்டேன் நான் என்னை

கொஞ்சி கொஞ்சி முத்தமிடும் வஞ்சமற்ற பைத்தியங்கள் ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை ஒன்று மனதால் குழந்தை இன்னொன்று வயதால் குழந்தை