Maname Mayangathae

Maname Mayangathae Song Lyrics In English


மனமே மயங்காதே விடியும் கலங்காதே விதி செய்த வேலையடி மகளே குலமகள் கோலங்கள் போனதே

மனமே மயங்காதே விடியும் கலங்காதே

வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை உரியவள் வந்தாள் வழி விடடி பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள் அவள் மஞ்சள் தானே அழித்திடடி

அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம் நாளைக்கு வேறொரு நாடகம்

மனமே மயங்காதே விடியும் கலங்காதே


ஊமை நாடகம் ஏனடி பெண்ணே உண்மையை சொல்ல தயக்கம் என்ன பிள்ளை செய்த பாவமும் என்ன வெள்ளை சேலையை மறுப்பதென்ன வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே வாழ்வது நாடக வாழ்க்கையே

மனமே மயங்காதே விடியும் கலங்காதே விதி செய்த வேலையடி மகளே குலமகள் கோலங்கள் போனதே

மனமே மயங்காதே விடியும் கலங்காதே