Mandhaveli Manjakili Intha

Mandhaveli Manjakili Intha Song Lyrics In English


பாடகர்  : எஸ் பி பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி என் மயக்கம் தீரடி குறுந்தாடி மீசை முறுக்கு சரி ஜோடி ஆசையிருக்கு குறுந்தாடி மீசை முறுக்கு சரி ஜோடி ஆசையிருக்கு

மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி

ஊரிலுள்ள ஆம்பளைங்க என்னை விட அழகா ஊர் உறங்கும் வேளையிலே உன்னிடத்தில் வரவா தேனிருக்கும் மல்லிகையை காதலிக்கும் கன்னிகையை மோத விட்டா லாபம் என்னடி

புன்னை மரம் இருக்கு பூவிரிக்க நமக்கு துள்ளி துள்ளி தத்தி வரும் புள்ளிமயில் எனக்கு கெடச்சா யோகம்தான் நீ அணைச்சா மோகம்தான் கெடச்சா யோகம்தான் நீ அணைச்சா மோகம்தான்

மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி




காத்தடிக்கும் காலம் இது கூவுதடி குயிலு கண் இரண்டில் மேடையிட்டு ஆடுதடி மயிலு காமனுக்கும் மாமனுக்கும் கைக்கலப்பு வந்ததற்கு காரணமே கன்னி மகளா

பட்டு மலர் சிரிக்க பத்து விரல் பறிக்க கிள்ளி கிள்ளி கையிரண்டில் அள்ளி அள்ளி எடுக்க வரவா மாலை நேரம் நீ வாழும் சோலை ஓரம் வரவா மாலை நேரம் நீ வாழும் சோலை ஓரம்

மந்தவெளி மஞ்சக்கிளி இந்த வழி வந்ததடி மானே பாரடி என் மயக்கம் தீரடி

பலே பலே பலே பலே பலே பலே