Maragatha Veenai Isaikkum

Maragatha Veenai Isaikkum Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் கே ஜே யேசுதாஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன்மழைச் சாரல் எனக்குள் வீசாதோ மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ

வீசும் காற்றே நீ மெல்ல வீசுor மலரின் வேகம் தாங்காது பேசும் கண்ணே நீ மெல்ல பேசு ஊரார் கேட்டால் ஆகாது

இதயம் எங்கும் பன்னீர் ஓடை இங்கும் அங்கும் பாய்கின்றது

பருவ வயலில் ஒரு அமுத பாசனம் இரவு விடிய ஒரு வருஷமாகணும் இருவர் கூடலாம் ஒருவராகலாம் மதன வேதம் தினமும் ஓதலாம்


மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ

கூந்தல் வந்து பாய் போடும் நேரம் கோடைத் தென்றல் பூத்தூவும் ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம் உள்ளம் எங்கே கண் மூடும்

கனலும் கள்ளும் ஒன்றானபோது கண்ணே பெண்மை உண்டானது எனது விழியில் ஒரு கனவு பூத்தது எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது புதிய வானமும் புதிய பூமியும் இணையும் காலம் எதிரில் வந்தது

மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ

இதயம் எங்கும் தேன்மழைச் சாரல் எனக்குள் வீசாதோ இருவர் : மரகத வீணை இசைக்கும் ராகம் மலரடி மேவும் நாதமானதோ