Moongil Ilai Kaadugale (Female)

Moongil Ilai Kaadugale (Female) Song Lyrics In English

மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள் மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலை தான் சொர்க்கம் என்றால் மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்

மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

மாம்பூக்களே மைனாக்களே கல்யாணப் பாவையின் கண்ணீரை பாருங்கள் நாணல்களே நாரைகளே பெண் பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்

பேரம் பேசவே கல்யாண சந்தையோ பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்

மூங்கில் இலை காடுகளே முத்து மழை மேகங்களே பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள் மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலை தான் சொர்க்கம் என்றால் மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள் கூறுங்கள்

பூச்சூடவும் பாய் போடவும் கல்யாண மாப்பிள்ளை கேட்பானே வாடகை பொன்னோடுதான் பெண் தேடுவாள் அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை

கேள்வி என்பதே இல்லாத தேசமா யாரும் உண்மையை சொல்லாத தோஷமா பெண் இங்கு தாரமா வந்தாலே பாரமா