Naan Enna Paada

Naan Enna Paada Song Lyrics In English


ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட நான் என்ன பாட தாளங்கள் போட ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பாடலாகுமோ நிலை மாறலாகுமோ

பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட நான் என்ன பாட தாளங்கள் போட ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பாடலாகுமோ நிலை மாறலாகுமோ

பெண் : பாதை மாறிப் போனது என்ன பாடல் கூட மாறுவதென்ன ஆயிரம் வேஷம் போடுவதென்ன ஆண்களில் காலமா

ஆண் : காலம் மாற கண்டதும் என்ன காவல் காத்து கொண்டதும் என்ன ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன நிழல் நிஜம் ஆகுமோ

பெண் : நீயும் நாளை மாற வேண்டும் போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும்

ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட ஆண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பெண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ


ஆண் : பூவை வந்து வேலியை போட்டாள் பூட்டுக் கூட பொன் விலங்காகும் இருதயம் என்ற ரகசிய வீட்டில் தினசரி நாடகம்

பெண் : நேரில் வந்து பாவையை பார்த்தால் நிலவும் கூட நிலமென ஆகும் நிலை தடுமாறி வழி அது மாறும் நிலை வர வேண்டுமோ

ஆண் : பார்த்து பார்த்து நெஞ்சில் மாற்றமாகி போனதே வழி மாறி போனதே

பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட பெண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் ஆண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ

பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட