Naidu Mama Naidu Mama

Naidu Mama Naidu Mama Song Lyrics In English

பாடலாசிரியர் : : கண்ணதாசன்

நாயுடு மாமா நாயுடு மாமா நல்லா என்ன பார்த்துக்கோ ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி ஆசை தன்னை தீர்த்துக்கோ

வந்தது என்ன போனது என்ன நின்றது என்ன நிலைத்து நினைத்து பார்த்தாயா கொண்டது என்ன தந்தது என்ன கண்டது என்ன கழித்து கணக்கு பார்த்தாயா

காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும் நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்

வஞ்சக எண்ணம் அஞ்சன வண்ணம் நெஞ்சினில் மின்னும் நெருப்பு வெளியில் தெரியாது நண்பன் போலே நாடகம் ஆடும் வம்பனோடு சிரிப்பு எளிதில் புரியாது

சொல்லும் செயல்களும் வெவ்வேறு தினுசு சூது வாதுகள் செய்வோர்க்கு மவுசு எல்லைக் கோடுகள் இல்லாத மனசு உள்ள மனிதர்கள் எல்லோர்க்கும் பரிசு காலமும் பொன்னாகும் காரியம் கண்ணாகும் நாளைக்கு என்னாகும் நடப்பது வேறாகும்