Nee Engey Nee Engey |
---|
நீ எங்கே நீ எங்கே இதயம் நின்று துடிக்கிறதே என் அன்பே என் அன்பே மனசும் சிலுவை சுமக்கிறதே

நெஞ்சோடு நீ வேண்டும் இல்லை என்றால் நீ வேண்டும் நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போகாத நீ
முதல் ஜென்மம் இது என்றால் இது போதும் உன்னை சேர்ந்தால்

வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது
உன் பெயரை சொல்லாத நேரத்திலே என் நாக்கு எனைத் திட்டும் கோவத்திலே உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தங்காது நகக் கண்கள் அதிலும் அழுதால் அது கூட போதாது
நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன் என் ரத்தத்தின் ஒரு பாதி கண்ணீராய் வெளி ஏறுதே
ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்
நீ எங்கே நீ எங்கே இதயம் நின்று துடிக்கிறதே என் அன்பே என் அன்பே மனசும் சிலுவை சுமக்கிறதே
மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன் வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றல் அதைப் போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன் பூமியினைப் போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்
ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் இது நீயின்றி வாழ்கின்ற நான் தான் அது
உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம் உன் மடியில் உயிர் விட தானே மீண்டும் ஒரு சந்தர்ப்பம்
மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான் அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தான் நிற்குமோ
இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்