Neelangarayil

Neelangarayil Song Lyrics In English


நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

உடம்பிலிருந்து
உசுர மட்டும் உருவி
உருவி எடுக்காதே

மாசம் மாசம்
டீசல் விலை போல்
ஆச பாசம் ஏத்தாதே

புடவை துவைக்கும்
துறவிய போல முழியா
முழிக்குறேன்

புலிவால் புடிச்ச
எலிய போல தவியா
தவிக்குறேன்

நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

பட்டா போட்ட
தங்கக் கட்டி பட்டாம்பூச்சி
போட்ட குட்டி ஒத்து போகும்
காதலியெல்லாம் பிஃப்டி பிஃப்டி
பொண்டாட்டி

கன்னிப்பொண்ண
ஓரம் கட்டி கன்னங்கிள்ளி
கண்ண கட்டி காதல் பண்ணும்
பூனை குட்டி எட்டி நில்லு நான்
கெட்டி

காதல் எறும்பு
ஊரும் போது கல்லும்
கூட தேயுமே தூரம் பார்த்து
நின்ற பெண்மை தோளில்
வந்து சாயுமே

நீ தொட தொட
உச்சந்தலை கொதிக்குது
விரல் பட பட உள்ளங்கால்
குளிருது

நீ சண்டைக்காரி
ஆகும்போது பதறுது
என் மண்டைக்குள்ள
நட்சத்திரம் சிதறது

புலிவால் புடிச்ச
எலிய போல தவியா
தவிக்குறேன்


புடவை துவைக்கும்
துறவிய போல முழியா
முழிக்குறேன்

நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே

செல்போன் மொழி
பேசி பேசி சின்ன பொண்ண
கெடுக்காதே நூலாம்படை
நூலை கட்டி கோயில் தேரை
இழுக்காதே

வெள்ளக்காரன்
போகும்போதே வெட்கம்
கூட போயே போச்சே
காலம் இப்போ ஹைடெக்
ஆச்சே கைய விட்டு போகாதே

ஓ பெண்கள்
கொண்ட ஆசையெல்லாம்
ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள்
போல ஆண்கள் கொண்ட
ஆசையெல்லாம் வெயிலில்
வைத்த வெண்ணை போல

நீ வர வர
வக்கீலுக்கு படிக்குற
நீ வாதம் பண்ணி வாதம்
பண்ணி ஜெய்க்குற

நீ முட்டாளுனு
நம்பவச்சு நடிக்குற உன்
முட்ட கண்ணில் ரெட்ட
முயல் புடிக்குற

புடவை துவைக்கும்
துறவிய போல முழியா
முழிக்குறேன்

புலிவால் புடிச்ச
எலிய போல தவியா
தவிக்குறேன்

நீலாங்கரையில்
கானாங்குருவி தானா
தவிக்குதே

வானம் திறந்து
வையம் கடந்து
பறப்போம் காற்றிலே