Opening Song Ithu

Opening Song Ithu Song Lyrics In English


பாடகர்  : அஜய் கிருஷ்ணா

இசை அமைப்பாளர்  : ஹிப் ஹாப் தமிழா

தட தட வென பூமி நடுங்க பட பட வென வானம் வெடிக்க ஆயிரம் ஆயிரம் டியாபரை தாண்டி மெத்தையை மொத்தம் நனைப்பவன் இவனே

சல சலவென எச்சி ஒழுக கலர் கலரா மொக்கு நனைய காலையும் மாலையும் வாயை திறந்து லாலிபாப்பை சப்பும் சந்திரனே

ஹோ ஓ ஓ ஹோ சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி

ஓபனிங் சாங் இது ஹேப்பனிங் சாங் இது பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது

திருபாச்சி வாள இவனோ மரபாச்சி டால் இவனோ சூ மந்த்ர காளியனோ ஜுமாஞ்சி குரங்கு இவனோ

பள்ளிக்கும் சிலந்திக்கும் அஞ்சாத கொசு இவனோ பஞ்ச் வசனம் பேசித்தான் இன்ச் இன்ச்சா கொல்பவனோ

இவன் உத்து பார்த்தா நீ உப்பு கண்டம் கைய வெச்சா நீ மிருதங்கம் வோர்ல்ட் மேப்ப இவன் மூந்து பார்த்தா எகிறி போகுமடா ஏழு கண்டமும்


இவன் எட்டி பார்த்தா குட்ட குழம்பும் கட்டி புடிச்சா உன் சோலி முடியும் பாட்டு படிச்சா காத்து எரியும் எனிமி நடுங்கும் கிருமி இவன்தாண்டா

சிங்க குட்டி குளியல் போடா தங்க தொட்டி

ஓபனிங் சாங் இது ஹேப்பனிங் சாங் இது பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது

ஓபனிங் சாங் இது ஹேப்பனிங் சாங் இது பாசகார கூட்டமெல்லாம் நாசமா போகுது

காதல் வெற்றி காதல் தோல்வி எதையம் தாங்கும் இதயம் தனியாளா ஹனிமூன் போவான் எவனால் இங்க முடியும்

 குப்புற படுத்து யோசிச்சாலே கார்பரேட்டு அலறும் இவன் ரப்பர வெச்சு தேச்சா போதும் ரவுடி கூட்டம் அழியும்

பொலக்காத பூசணி டா இவன் நசுங்காத எலுமிச்ச டா சிதறாத சில்லற டா இவன் ஏழைகளுக்கு ஏழற டா

ஆட்டம் இங்க ஆடாத உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா ஹாப்பி பர்த்டே கேன்டல் கூட ஆட்டம் பாமா மாறுமடா