Oru Raagam

Oru Raagam Song Lyrics In English


ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி அழகான கைகள் மீட்டும் வேலை

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிப்போகும் நாளும் காதல் ராகம் பாடும் பாடும்

இதழில் போடும் இதழின் காயம் இதழிலாறும் இனிமையாகும் தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்

உன்னை வாழ்த்திப் பாடும் பாடல் உதயராகமோ நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ

புது கனவுக் காலம் தெரிந்ததே நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேலை

ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

ஆஆஆஆஅஆ ஆஆஆஆஅஆ ஆஆஆஆஅஆ


இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது காலம் நேரம் தேவை இல்லை இல்லை

மலையின் ஓரம் மலர்ந்த பூவைப் பறிக்கும் வீரம் இருக்கும்போது காவல் தாண்டும் பூவை முல்லை முல்லை

மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி பானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா

அட மனதில் சாரல் அடித்ததா கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே அழகான கைகள் மீட்டும் வேலை

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை புது ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை