Poongathu Veesum Adhikalai

Poongathu Veesum Adhikalai Song Lyrics In English

பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம் நம்ம பொழப்பு நல்லா நடக்க நம்ப சாமி வரத்த கொடுக்கும் அந்த சாமி வரத்த கொடுத்தா நம்ப குடும்பம் நல்லா இருக்கும்

பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்

கட்டு மரத்தை கட்டி போவோம் கடலுக்குள்ளே மீனு கெடச்சதுன்னா கொண்டாட்டம்தான்

பொங்கி அடிக்கும் அலை மீண்டும் கரையில் நம்ம வந்து இறக்கி விட்டா சந்தோஷம்தான் கடல் தேவி நம்ம காப்பாத்துவா பெத்த தாயப் போல சோறூட்டுவா

நம்மோட பாதை தண்ணீரு மேலே நம்மோட வாழ்க்கை காத்தாடி போலே னனனனனன னனனனனன

பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்

உச்சி மரத்துலெல்லாம் கட்சி கொடிப் பறக்க கூட்டம் நடக்குதப்பா ஊருக்குள்ள

எந்த குபேரன் வந்து ஆண்டா நமக்கு என்ன நம்ம பொழப்பு இந்த நீருக்குள்ளே அட தோணி தான்டா நம்ம சொத்து அத நம்பி வாழ்வோம் பாடுபட்டு

நம்பிக்கைதான்டா நம்மோட செல்வம் நாமெல்லாம் ஒண்ணா முன்னேறி செல்வோம்

தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன