Poovil Vandu Bothai Kondu

Poovil Vandu Bothai Kondu Song Lyrics In English


பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் ஐயா

பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் ஐயா

அழகான சிலையோடு பழகாமலே அனுராக சுகமேதும் புரியாமலே இதுதானே என் வாழ்வில் முதல் பாடமே இனிமேலே மலரோடு உறவாடுமே

பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் ஐயா

இமையாத விழிகூட கவிபாடுமா சுவையான இதழ் கூட ஜதி போடுமா எழில் மேவும் இளம் மாதர் குணம் மாறுமா இனியேனும் புரியாத நிலையாகுமா


பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் இன்று பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் இது

இசை பாடும் குயில் ஏனோ விரைந்தோடுது உன் இசையாலே தான் வெட்கிப் பறந்தோடுது அசைந்தாடும் மயில் ஏனோ நிலை மாறுது உன் அழகான உடல் கண்டு அது நாணுது

இருவர் : பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை பாரும் இன்று பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் இன்று