Raja Illa

Raja Illa Song Lyrics In English


ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜா தான்

ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்

ஒரு தேசம் உண்டு உனக்கு
அது உனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு எனக்கு
அது எனக்குப் போதுமே
ஓஓஒஓஒஓஒ

ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்

நட்பு எனும் ஏடெடுத்து
நான் வரைந்த முதல் எழுத்து
உன்னை அன்றி யாரும்
இல்லை ஊரிலே

எத்தனையோ
கோயில் கொண்டு
இங்கிருக்கும் தெய்வம் உண்டு
உன்னைப் போல் வந்ததில்லை நேரிலே

சின்ன மலர்க் காவலுக்கு
என்றிருந்த தென்றலுக்கு
விட்டு விலகும் பொழுதும் வந்ததே

ஆசையாய் பூவிடு
வாய் வராத ஊமைக் குயில் போல
நானும் வாழ்கிறேன்

ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்


ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்

இங்கிருந்த காலங்களும்
அன்பு கொண்ட கோலங்களும்
எப்பொழுதும் வாழும்
இந்த கண்ணிலே

என்னுடைய எண்ணங்களும்
கற்பனையின் வண்ணங்களும்
என்னவென்று நானும் சொல்ல
சொல் இல்லே

நல்ல மனம் கொண்டிருக்கும்
நங்கை விழி கண்டிருக்கும்
எண்ணக் கனவு எதுவோ கூறம்மா

வானம் போல் உன் மனம்
பால் நிலாவைப் போல அதில்
நானும் வாழப் பார்க்கிறேன்

ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான் ஓஒ
ராஜா இல்லா ராணி
என்றும் ராணி தான்

ஒரு தேசம் உண்டு எனக்கு
அது எனக்குப் போதுமே
ஒரு நேசம் உண்டு உனக்கு
அது உனக்குப் போதுமே
ஓஓஒஓஒஓஒ

ராஜா இல்லா ராணி
என்றும் ராணிதான்
ராணி இல்லா ராஜா
என்றும் ராஜாதான்