Sandha Kavigal Padidum

Sandha Kavigal Padidum Song Lyrics In English


பாடலாசிரியர் : கங்கை அமரன்

சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே

சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல

சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளேஏஏஏ

சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனதே சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும் சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்

மலர் மாலை சூடும் உறவோடு கூடும் என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம் பல


சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளேஏஏஏ

தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும் தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும் என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும் என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்

மடைபோல ஓடும் மனதோடு கூடும் என் உள்ளம் கண்டாடும் உறவுகளில் இனிய சுகம் தினம் பல

சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளே சொந்தம் தர வரும் ஆனந்தம் சிந்தும் கவி மழை ஆரம்பம் தோன்றாத பேரின்பம் தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல

சந்தக் கவிகள் பாடிடும் மனதினில் இன்பக் கனவுகளேஏஏஏ