Santham Thappathu Thalam

Santham Thappathu Thalam Song Lyrics In English

சந்தம் தப்பாது தாளம் தப்பாது இவளாடும் சுகமான ஆட்டம் இவள் இடையினில் உடையொரு தடையில்லை இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை எங்கும் காணாத அங்கம் சங்கீதமே

கொஞ்சும் இளமகள் மஞ்சள் நிலவென கொண்டாட வந்தாளிங்கே கொத்தும் கிளி எனும் தத்தை உன்னுடன் பந்தாட வந்தாளிங்கே

கைக்காட்டும் நாள் வந்தது மை தீட்டி பெண் வந்தது என்னுடல் ஏன் வந்தது உன் போன்ற ஆள் தந்தது

சந்தம் தப்பாது தாளம் தப்பாது இவளாடும் சுகமான ஆட்டம் இவள் இடையினில் உடையொரு தடையில்லை இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை எங்கும் காணாத அங்கம் சங்கீதமேஏஏ

மங்கை இருபது மன்னன் அறுபது என்றாலும் இன்பம் உண்டு மாலை அணிந்தவள் போலே இவளுடன் நீ ஆட சொந்தம் உண்டு

நீ சொல்லி நான் கேட்பதா நான் சொல்லி நீ கேட்பதா யார் சொல்லிக் கேட்டாலென்ன ஆனந்தம் உண்டாகட்டும்