சுத்தி சுத்தி வந்தீக பாடல் வரிகள்

Starring Rajinikanth, Soundarya
Movie Padayappa
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam, Harini, Savitha Reddy
Year 1999

Suthi Suthi Song Lyrics In English

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக

எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பொம்பள உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இன்ப தொல்ல வாழ்க

அடி காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக

என் காது கடிக்கும்
காது கடிக்கும் பல்லுக்கு

காயம் கொடுக்கும்
காயம் கொடுக்கும் வளவிக்கு

மார்பு மிதிக்கும்
மார்பு மிதிக்கும் காலுக்கு
முத்தம் தருவேன்

என் உசுர குடிக்கும்
உசுர குடிக்கும் உதட்டுக்கு

மனசை கெடுக்கும்
மனசை கெடுக்கும் கண்ணுக்கு

கன்னம் கீறும்
கன்னம் கீறும் நகத்துக்கு
முத்தம் இடுவேன்

அடி தும்மும் பொழுதிலும்
இம்மி அளவிலும் பிரியாதீக
உம்ம தேவை தீர்ந்ததும்
போர்வை போர்த்தியே உறங்காதீக



இனி கண் தூங்கலாம்
கைகள் தூங்காதுக
ஒரு தாலிக்கு முன்னால
தாலாட்டு வைக்காதீக

சுத்தி சுத்தி வந்தீக ஹா
சுட்டு விழியால் சுட்டீக ஹா
முத்தாடும் ஆச முத்தி போக

எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக ஹா
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக ஹையோ

பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க

அட காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன்
தயிருபோல தயிருபோல ஒரையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு ஹையோ கடையிறீக

நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் ஹையோ அடிக்கிரீக

உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக
தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக

எல்லை தாண்டாதிக
என்னை தூண்டாதிக
என் வாயோடு வாய் வெக்க
வக்கீலு வெக்காதீக

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக

கண்ணால் எதையோ பார்த்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

பொம்பள உசுரு போக போக நோக
ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க

அட காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக

எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

ஹையோ............

Suthi Suthi Song Lyrics from movie Padayappa. Suthi Suthi song sung by S. P. Balasubramanyam, Harini, Savitha Reddy. Suthi Suthi Song Composed by A R Rahman. Suthi Suthi Song Lyrics was Penned by Vairamuthu. Padayappa movie cast Rajinikanth, Soundarya in the lead role actor and actress. Padayappa movie released on 1999