Therku Malai Kaathu

Therku Malai Kaathu Song Lyrics In English


ஓஹோ ஓஹோ ஓஹோ

தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது

கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது

தெற்கு மலை காத்து வீசுதுஓஓ

ஆஆஅருவிகளில் குளித்த மகள் தலை துவட்ட இங்கு மேகம் வந்ததோ இளையவளின் மனம் தழுவ குளிர் கொண்டு இங்கே தென்றல் வந்ததோ

தாவும் பெண்ணுள்ளம் போலே ஆடும் உல்லாச மயில்கள் தாயின் தாலாட்டைப் போலே பாடும் சங்கீத குயில்கள்

துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான் சொல்லி போகும் வண்ண மெட்டுதான் துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான் சொல்லி போகும் வண்ண மெட்டுதான்

தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுதுஓஓஒஓ


ஆஅஆஇலைகள் எல்லாம் மரகதமோ இறைவனின் தோட்டம் எங்கும் தங்கமோ மலர்கள் எல்லாம் புதையல்களோ மறைத்தவர் யாரோ அள்ளிச் செல்லவோ

மான்கள் என்னோடு ஆட மலர்கள் என்னோடு பேச ஆஹா ஆனந்தம் எல்லாம் அலையாய் என் மீது மோத

பச்சை உடை கொண்ட மலையரசி இங்கே உந்தன் இளவரசி பச்சை உடை கொண்ட மலையரசி இங்கே உந்தன் இளவரசி

தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது தெற்கு மலை காத்து வீசுது இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது

கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது கொட்டும் பனி முத்தமிடத்தான் மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது

தெற்கு மலை காத்து வீசுதுஓஒஓ