Thoongu Moonchi

Thoongu Moonchi Song Lyrics In English


பெண் தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே

ஆண் ஹெய் பாட்டெடுத்து பாடுங்கடி
நமகென்ன கவலை
நம்ம பேர் விளங்க சொல்லி சொல்லி
அடிச்சிடு தவிலை

பெண் ஆசை வந்தா பாட்டு வரும்
பாட்டு வந்தா ஆட்டம் வரும்

ஆண் போடு சக்க போடு
இந்த பூலோகம் கைய தட்டும்

தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே

ஹொய்யாஹொய்யாஹொய்யா
ஹொய்யாஹொய்யாஹொய்யாஹொய்யா
ஹொய்யாஹொய்யாஹொய்யாஹொய்யா
பெண் ஈர மழை மேகங்களே
தூரல் போடுங்கள்
இந்த ஈச்ச மர கிளையினிலே
ஊஞ்சல் ஆடுங்கள்

ஆனை மலை முகடுகளை
கடந்து வாருங்கள்
இந்த ஆல புழை ஓரத்திலே
நடந்து பாருங்கள்

பூமிக்கு என்னென்ன தாகங்களோ
பங்குனி மாதத்திலே
பூவைக்கு என்னென்ன மோகங்களோ
பூ பூத்த காலத்திலே

இந்த நீரும் அந்த வேரும்
ஒன்று சேர்கின்ற நாளல்லவோ

பெண் ஈர மழை மேகங்களே
தூரல் போடுங்கள்
இந்த ஈச்சமர கிளையினிலே
ஊஞ்சல் ஆடுங்கள்


நேற்றுவரை ஏற்ற துணை
நங்கை தேடினாள்
வெள்ளி நிலவெரிக்கும் ராத்திரியில்
நாளும் வாடினாள்

கடல் புரத்து மீனிரண்டை
கண்ணில் வாங்கினாள்
அதில் கனவுகளை பூட்டி வைத்து
கன்னி ஏங்கினாள்

ஆடைக்குள் நின்றாடும் சிற்றிடைதான்
அச்சாரம் கேக்குதம்மா
அங்கங்கள் ஒவ்வொன்றும் வெப்பத்தினால்
அங்கங்கு வேர்க்குதம்மா

இந்த நாளும் எந்த நாளும்
இங்கு சந்தோஷ சங்கீதமே

பெண் வாலிபமே வாலிபமே
வாசல் தேடி வா
புது வசந்த விழா காண்பதற்கு
விரைந்து ஓடிவா

பெண் தூங்குமூஞ்சி மரங்கள்
எல்லாம் வெக்கத்தினாலே
ஹாய் ஹாய்
பெண் ஒரு தாவணிதான்
போட்டிருக்கு பூக்களினாலே
ஹாய் ஹாய்

ஆண் பாட்டெடுத்து பாடுங்கடி
நமகென்ன கவலை
ஹோஹோ
ஆண் நம்ம பேர் விளங்க
சொல்லி சொல்லி அடிச்சிடு தவிலை
ஹோஹோ

பெண் ஆசை வந்தா பாட்டு வரும்
பாட்டு வந்தா ஆட்டம் வரும்
ஆண் போடு சக்க போடு
இந்த பூலோகம் கைய தட்டும்
ஏய்

அனைவரும் : தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம்
வெக்கத்தினாலே
ஒரு தாவணிதான் போட்டிருக்கு
பூக்களினாலே