Un Azhagai

Un Azhagai Song Lyrics In English

உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா

முகவரி கேட்டு தினம் வானவில் வருமே உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன் உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்

உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா

கண்ணுக்குள் மச்சங்கள் கணக்கெடுப்பில் தவறியது பனிக் கூட உன் சிரிப்பை படம் பிடித்து காட்டியது நான்தான் உன் தலையணைகள் என்னோடு தூங்காது காதலின் தலைவலிகள் கண் போல தூங்காது

சித்தன்ன வாசல் ஓவியம் உனைப் போல நடக்காது சிற்றெறும்பு கூட்டம் கூட உன்னை போல கடிக்காது

உள்ளங்கை வானில் என் முகம் பார்த்து அன்பே பாதி இரவில் வேர்த்தேன் மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது கண்ணோடு கண் கலக்கும் காதல் இது

உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா

நீரில் விழும் சூரியனை காதல் கையில் அள்ளி வரும் பனித் துளியில் உலகத்தையே காதல் பூக்க செய்து விடும்

பூமியெனும் பூப்பறித்து காதல் சொல்லி புள்ளி வைப்போம் உயிரை மட்டும் வாகனமாய் காதலுக்கு அனுப்பிடுவோம்

விண்மீனை மின்னல் வலையில் அள்ளி வந்து தருவேன் என் நெஞ்சில் உன்னை தாங்கி ஏழு ஜென்மம் வருவேன்

பூத்து கிடக்கிற பனி மலை அள்ளி செய்தேன் உனக்கொரு காதல் பள்ளி மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது கண்ணோடு கண் கலக்கும் காதல் இது