Vanakkiliye Vanakkiliye

Vanakkiliye Vanakkiliye Song Lyrics In English


வனக்கிளியே வனக்கிளியே நந்தவனக் கிளியே

மார்கழி மாதம் முன் பனிக் காலம் வீசிடும் பூங்காற்றே மூங்கிலில் மீது மோதிடும் போது கேட்டிடும் தேன் பாட்டே

காலையில் அதிகாலையில் மாலையில் மலர்ச்சோலையில் என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான்

வனக் கிளியே நந்தவனக் கிளியே வனக் கிளியே நந்தவனக் கிளியே

சின்னக் கண்ணன் உன்னைப் பார்த்து தோகை மயில் ஆடுது கன்னி எந்தன் நெஞ்சம் நாளும் உன்னை எண்ணி வாடுது

ஜம்ஜம் ஜஜம் ஜம்

ஓபுல்வெளியில் மெத்தையிட்டு மூடு பனி தூங்குது ராசா மகன் தோளில் வண்ண ரோசா ஒண்ணும் சாயுது

ஏரியில் ஓஓஓ ஏரியின் கரை ஓரமே நாரைகள் கொஞ்சும் நேரமே என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான்

வாடையில் ஆடும் ஜாடையில் பாடும் வாசனை பூச்செண்டு ஓஓஓ ஆரம்பமாகும் ஆனந்த ராகம் வாழிய பல்லாண்டு


வனக்கிளியேஏ என்றும் இளம் காதல் மனம் வாழும் வனக்கிளியேஏ சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்



தேசம் விட்டு தேசம் வந்த தண்ணீர் மழை மேகமே தேக்கு மரக் காட்டில் தான் தூறல் விழும் நேரமே

ஜம்ஜம் ஜஜம் ஜம்

ஓவெள்ளி மழைச்சாரல் பட்டு வாடும் இந்த தேகமே வஞ்சி மகள் தேகமெல்லாம் உன்னுடைய மோகமே

நீரலை ஓஓஓ நீரலை வந்து பாய்ந்திட நாணலும் தலை சாய்ந்திட என்னத்தான் மெல்லத்தான் என்னைத்தான் அணைத்தான்

அன்பே உந்தன் பேரழகெல்லாம் அஜந்தாவின் ஓவியம் இங்கே சிந்தும் வாய்மொழி எல்லாம் இளங்கோவின் காவியம் ஓஓஓ

வனக்கிளியேஏ என்றும் இளம் காதல் மனம் வாழும் வனக்கிளியேஏ சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்