Yaen Indha Thindattam

Yaen Indha Thindattam Song Lyrics In English


பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஏனிந்த திண்டாட்டம் கண்ணா நானென்ன அறியாத பெண்ணா

ஏனிந்த திண்டாட்டம் கண்ணா நானென்ன அறியாத பெண்ணா எங்கே உன் வீரப் பேச்சு எல்லாம் நேத்தோடு போச்சு நீயெந்தன் கைப் பொம்மைதானே சும்மா வா

ஏனிந்த திண்டாட்டம் கண்ணா நானென்ன அறியாத பெண்ணா

உனக்கு தெரியாமல் நான் கண்ட இன்பம் உரிமை கொண்டாட அல்ல உனக்கு தெரியாமல் நான் கண்ட இன்பம் உரிமை கொண்டாட அல்ல

திட்டம் போட்டேன்யா நானுன்னை வெல்ல வெற்றி என் பக்கம் வேறென்ன சொல்ல திட்டம் போட்டேன்யா நானுன்னை வெல்ல வெற்றி என் பக்கம் வேறென்ன சொல்ல

ஏனிந்த திண்டாட்டம் கண்ணா நானென்ன அறியாத பெண்ணா

ஹேய் யூ பிக்பாக்கெட் போலீஸ் வில் அரெஸ்ட் யூ சி


காசை திருடினால் கை விலங்கை பூட்டலாம் காதலை திருடிபுட்டேன்யா சட்டம் தடுக்காத திருட்டய்யா காதல் தொட்டு தழுவாமல் தீராது மோகம்

ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே நான் உன்னை அறிவேன்டி பெண்ணே ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே நான் உன்னை அறிவேன்டி பெண்ணே நாணம் பெண்ணுக்கு வேணும் நேரம் வந்தாலே கூறும் நீ எந்தன் கைப்பாவைதானே

ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே நான் உன்னை அறிவேன்டி பெண்ணே

தாலி உன் மார்பில் பொன்னூஞ்சல் ஆட தாரமாக நீ மாற வேண்டும் தாலி உன் மார்பில் பொன்னூஞ்சல் ஆட தாரமாக நீ மாற வேண்டும்

நல்ல தாயான பின்னாலே தாலாட்டு நல்ல தாயான பின்னாலே தாலாட்டு அன்பு தாம்பத்யம் ஒன்றேதான் உன் வெற்றி அன்பு தாம்பத்யம் ஒன்றேதான் உன் வெற்றி

ஏனிந்த கொண்டாட்டம் கண்ணே நான் உன்னை அறிவேன்டி பெண்ணே நாணம் பெண்ணுக்கு வேணும் நேரம் வந்தாலே கூறும் நீ எந்தன் கைப்பாவை தானே லாலாலா லாலாலாலா ஹ ஹா லாலாலா லாலாலாலா லாலாலாலா