Yedho Yedho

Yedho Yedho Song Lyrics In English




ஓஹோஓஹோ ஓ ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள் என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ காதல் செய்யும் மாய லீலை இது தானோ

ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்

மாலைப் பொழுதும் வீசும் வாடைக் காற்றும் சொல்வதென்னவோ காதல் ராகம் தானா ஸ்வரங்களின் அபிநயம் அது ஒரு புது சுகம்

ஆற்றின் அலையும் ஆடும் வாசப் பூவும் கேட்பதென்னவோ காதல் ராகம் தானா இது ஒரு அனுபவம் இசை என்னும் அதிசயம்

நானாகவே நானில்லையே நானாகவே நானில்லையே என்னவென்று நான் சொல்ல இன்னும் என்ன நான் சொல்ல வா வா அன்பே வா

ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்



உன்னை நினைத்தே மீட்டும் வீணை ஏங்கும் வீணை மடியில் காதல் ராகம் தூங்கும் உறவென நீ இரு ஒரு கணம் விரல் தொடு

எண்ணத் திரையில் வண்ணக் கோலம் போடு வண்ணக் கனவில் வந்து விளையாடு சுகம் என்னும் அலை வரும் இளமையும் வலையிடும்

பார்க்காதது கேட்காதது பார்க்காதது கேட்காதது வேறெங்கிலும் காணாதது

காதல் மேடையில் இங்கே காண வேண்டும் இன்றே வா வா அன்பே

ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள் என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ காதல் செய்யும் மாய லீலை இது தானோ

ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல் எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்