Aadavar Thazhuvum Azhagiya

Aadavar Thazhuvum Azhagiya Song Lyrics In English


பாடகி : பி சுஷீலா

பாடலாசிரியர் : இனியவன்

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை ஆயினும் உன்னை நாடிடும் காரிகை ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை ஆயினும் உன்னை நாடிடும் காரிகை

ஓவியம் எழுதும் தூரிகை உன்னிடம் மயங்கும் அகலிகை ஓவியம் எழுதும் தூரிகை உன்னிடம் மயங்கும் அகலிகை

தேனிலா உனது ஆசையில் தினமும் தேயுதே காயுதே தேனிலா உனது ஆசையில் தினமும் தேயுதே காயுதே

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை

தென்றல் காற்று தீண்டத்தானே சோலைப் பூவும் மலர்ந்தது உந்தன் கைகள் தீண்டத்தானே எந்தன் மேனி வளர்ந்தது

தென்றல் காற்று தீண்டத்தானே சோலைப் பூவும் மலர்ந்தது உந்தன் கைகள் தீண்டத்தானே எந்தன் மேனி வளர்ந்தது

புது நாடகம் தினம் ஆடலாம் புது நாடகம் தினம் ஆடலாம் விழியாலே கதை பேசி விளையாடலாம்

ஆசையோ மனதில் ஆயிரம் பாடுவோம் புதிய காவியம் ஆசையோ மனதில் ஆயிரம் பாடுவோம் புதிய காவியம்

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை ஆயினும் உன்னை நாடிடும் காரிகை


ஓவியம் எழுதும் தூரிகை உன்னிடம் மயங்கும் அகலிகை தேனிலா உனது ஆசையில் தினமும் தேயுதே காயுதே

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை ஆயினும் உன்னை நாடிடும் காரிகை

நதிகள் யாவும் கரையைத் தொட்டு நடந்தாலென்ன உலகிலே கடலில் தானே நதிகள் சென்று கலந்து வாழும் முடிவிலே

நதிகள் யாவும் கரையைத் தொட்டு நடந்தாலென்ன உலகிலே கடலில் தானே நதிகள் சென்று கலந்து வாழும் முடிவிலே

நதி என்பது நானல்லவோ நதி என்பது நானல்லவோ நதி தேடும் கடல் இங்கே நீயல்லவோ

ஆசையோ மனதில் ஆயிரம் பாடுவோம் புதிய காவியம் ஆசையோ மனதில் ஆயிரம் பாடுவோம் புதிய காவியம்

ஆடவர் தழுவும் அழகிய மல்லிகை ஆயினும் உன்னை நாடிடும் காரிகை

ஓவியம் எழுதும் தூரிகை உன்னிடம் மயங்கும் அகலிகை தேனிலா உனது ஆசையில் தினமும் தேயுதே காயுதே லாலலா லல ல லால்ல லா லாலலா லல ல லால்ல லா