Ariyatha Pillai Pole

Ariyatha Pillai Pole Song Lyrics In English


பாடகர்கள் : ஜிக்கி மற்றும் வி என் சுந்தரம்

இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்

அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா வீண் ஆத்திரப் படலாமா கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா கொஞ்சம் வேணாமா

அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா கொஞ்சம் வேணாமா

புரியாத புதுமையான காதலே புரியாத புதுமையான காதலே அதுக்கு பூட்டப் போட்டு மாட்டணுமா காதிலே எந்தன் காதிலே

அடையாளம் காட்டவே கடிவாளம் மாட்டினேன் அடையாளம் காட்டவே கடிவாளம் மாட்டினேன் அடடா நீ புரிஞ்சிக்காமே வெறுக்கலாகுமா என்னை வெறுக்கலாகுமா அன்பு மாறாது வம்பு கூடாது


அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா வீண் ஆத்திரப் படலாமா கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா கொஞ்சம் வேணாமா

அடங்காத ஆசை எந்தன் மீதிலே அடங்காத ஆசை எந்தன் மீதிலே ஆனால் அன்பு ஏனோ அடையாளம் போடலே பூட்டைப் போடலே

அலைப் போலே காதலே அவள் நெஞ்சில் மோதலே அலைப் போலே காதலே அவள் நெஞ்சில் மோதலே அதுபோல நானும் சும்மா இருக்கலாகுமா அன்பைக் குறைக்கலாகுமா ஆசை தீராது நேசம் மாறாது

அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா அறியாத பிள்ளை போலே ஆத்திரப் படலாமா வீண் ஆத்திரப் படலாமா கண் அசைவாலே தெரிஞ்சு கொள்ள வேணாமா கொஞ்சம் வேணாமா