Ival Oru Pournami

Ival Oru Pournami Song Lyrics In English


பாடலாசிரியர்  : வைரமுத்து

கலைமகள் வாழ்கவே வாழ்கவே கலைகளும் வாழ்கவே வாழ்கவே நலமெல்லாம் சூழ்கவே சூழ்கவே புவியினை ஆள்கவே ஆள்கவே ஆஆஆஆஆஆஆஆ

தாதாதத்தித்தாம் தத்தித்தாம் ஸஸஸநிகஸஸஸநிக ஸஸஸநிக ஸஸஸநிகஸ ஸஸஸநிகஸ ஸஸஸநிகஸ

இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி ஸ்வரம் தரும் சுந்தரி

இவளொரு பௌர்ணமி ஆஆஆஆ இசை தரும் கண்மணி ஆஆஆஆ ஸ்வரம் தரும் சுந்தரி ஸநித

இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள் இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும்

இவளொரு பௌர்ணமி ஆஆஆஆ இசை தரும் கண்மணி ஆஆஆஆ ஸ்வரம் தரும் சுந்தரி ஸநித

இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி

தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம்

பதஸ ஆஆ தஸநி ஆஆஆ தநிஸ ஆஆஆ

ஆடத்தான் இங்கே பிறவி எடுத்தேன் கலைமகள் பாதத்தில் எனைக் கொடுத்தேன் ராக ராஜாங்கம் நானே படைத்தேன் இதயத்தில் தாளத்தின் பதம் பணிந்தேன்

கமஸ ஆஆஆ ஸகநி ஆஆஆ மதநிஸ ஆஆஆ தநிஸக ஆஆஆ நிஸகம ஆஆஆ ததநிநிஸஸகக ஸஸநிநிததபப

ஜதிகள் பாடியதும் நதிகளும் நகர்ந்தது இமைகள் ஆடியதும் பறவைகள் பறந்தது புவிகள் ஏழும் இவள் விரல்களில் விளைந்தது கவிகள் யாவும் இவள் விழிகளில் எழுந்தது

உலகம் இவளின் அரங்கம் கலையின் சுரங்கம் கவிதை அரங்கம் இருந்தும் இவளது மனதிற்குள் அழுகின்ற நினைவுகள் அதை சொல்ல மொழியில்லை வழியில்லை


இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி ஸ்வரம் தரும் சுந்தரி இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி

கன்னம் தன்னில் கண்டேனய்யா கண்ணீர் செய்த காயம் ஆடும் போதும் பாடும் போதும் ஆறும் காயம் ஆறும்

மேடை மீது கானம் பாடி கொஞ்சும் காலம் செய்த கோலம் இங்கே கண்ணீர் தானே மிஞ்சும் ஆஆஆ

கோதை எந்தன் கூந்தல் மீது மேகம் வந்து துஞ்சும் அங்கே வந்து ஆடச் சொல்லி சொர்க்கம் என்னை கெஞ்சும்

இதயம் தினமும் மெழுகாய் உருகும் இதயம் தினமும் மெழுகாய் உருகும் உறங்கும் பொழுதினில் கனவும் கருகும் உறங்கும் பொழுதினில் கனவும் கருகும்

கண்ணீரிலே என் காவியம் திண்டாடுதே பெண்ணோவியம் கலைகளே சுகம் தரும் இசை ஒன்றே நிரந்தரம்

புதிய கனவு தினமும் எழுந்து வர பழைய உறவு விழியில் கசிந்து வர ஸஸகநிஸகதநி மததகமதநி நிஸஸதநிநிமத கமஸ ஸகமக

இசையெனும் மழைதனில் வழிந்தது புது ரசம் ஸஸமமஸஸகக நிநிஸஸககஸா இவளது அசைவினில் விளைந்தது நவரசம் ஸஸமமஸஸகக நிநிஸநிதநிஸ

திசைகள் முழுதும் இசைகள் பொழியும் இவளொரு பௌர்ணமி விழியில் இரண்டு ஒளிகள் மொழியும் இவளொரு பௌர்ணமி நடன சபையில் தினமும் உலவும் இவளொரு பௌர்ணமி ஆஆஆஆஆஆஆஆ

இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி ஸ்வரம் தரும் சுந்தரி

இவளொரு பௌர்ணமி ஆஆஆஆ இசை தரும் கண்மணி ஆஆஆஆ ஸ்வரம் தரும் சுந்தரி ஸநித

இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள் இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும்

இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி