காதல் ஆசை பாடல் வரிகள்

Starring Suriya, Samantha Akkineni
Movie Anjaan
Music ByYuvan Shankar Raja
Lyric By Kabilan
SingersYuvan Shankar Raja, Sooraj Santhosh
Year 2014

Kaadhal Aasai Song Lyrics In English

காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி
வந்து உயிரை தொட்டதோ காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே

யோசனை மாறுமோ
பேசினால் தீருமோ
உன்னில் என்னை போல
காதல் நேருமோ

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை
நீ மாற்று என் நேரமே

அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே

காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்க வில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால் யாரும் இல்லையே

பகல் இரவு பொழிகின்ற பனித்துளிகள்
நீதானே வயதினை நனைக்கிறாய்
உயிரினில் இனிக்கிறாய்
நினைவுகளில் மொய்க்காதே
நிமிடமுள்ளில் தைக்காதே


அலையென குதிக்கிறேன்
உலை என கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன்
கூப்பிடும் நேரத்தில்
உன்னால் விக்கல்
வருதே ஏழு நாள்
வாரத்தில் ஏழு நாள்
வாரத்தில் ஒரு பார்வை
பாரு கண்ணின் ஓரத்தில்

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை
நீ மாற்று என் நேரமே

அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே

விழிகளிலே உன் தேடல் செவிகளிலே
உன் பாடல் இரண்டுக்கும் நடுவிலே
இதயத்தின் உரையாடல் காதலுக்கு விலையில்லை
எதை கொடுத்து நான் வாங்க

உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை
யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம் நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்

ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை
நீ மாற்று என் நேரமே

அன்பே நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமேl

Kaadhal Aasai Song Lyrics from movie Anjaan. Kaadhal Aasai song sung by Yuvan Shankar Raja, Sooraj Santhosh. Kaadhal Aasai Song Composed by Yuvan Shankar Raja. Kaadhal Aasai Song Lyrics was Penned by Kabilan. Anjaan movie cast Suriya, Samantha Akkineni in the lead role actor and actress. Anjaan movie released on 2014