Kukkuk Koovena

Kukkuk Koovena Song Lyrics In English

குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது

இதுதான் எனது நெடுநாள் கனவு புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது இதுதான் எனது நெடுநாள் கனவு

கன்னத்தோடு கன்னம் வைத்து கள்ளெடுக்கும் கள்ளன் நானே தேக்கி வைத்த தேனை எல்லாம் பாக்கி இன்றி தந்தாள் மானே

காவேரி மீனை கஸ்தூரி மானை கையோடு ஏந்த கும்மாளமோ காவல் மீறும் எண்ணம் வந்ததோ பாவை வண்ணம் போதை தந்ததோ

குக்குக் கூவென கூவும் குயிலிது அரங்கேறுது புது சுரம் பாடுது இதுதான் எனது நெடுநாள் கனவு புதிதாய் தொடங்கும் பல நாள் உறவு

மேற்கில் போகும் மேகம் ஒன்று வானம் பார்க்கும் மண்ணைக் கண்டு தூறல் போடும் நேரம் இன்று வாழ வேண்டும் வாழைக்கன்று

வேரோடும் மண்ணில் நீரோடும் போது ஏதேதோ எண்ணம் உண்டாகுமோ காமன் போடும் பாணம் அல்லவோ காயம் மாறும் மாயம் சொல்லவோஓ