Kukkukkoo Ena Koovum

Kukkukkoo Ena Koovum Song Lyrics In English


குக்குக்கூ குக்குக்கூ என கூவும் குயிலோசை தித்திக்கும் என் கண்ணன் குழலோசை நாளும் நாளும் கேட்டு என் தேகம் வாடினேன் காதல் ராதை நானும் குயிலாக பாடினேன் கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து

குக்குக்கூ என கூவும் குயிலோசை நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து

குக்குக்கூ என கூவும் குயிலோசை

உன்னோடு நான் சேர உறக்கமில்லை கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை உன்னோடு நான் சேர உறக்கமில்லை கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை

பள்ளியறைக்கு பூஜை நான் போடவா அள்ளி அணைக்க அன்பே என் கூடவா

உள்ளவரைக்கும் அள்ளி வழங்கு வெள்ளம் அணை தாண்டாது விட்டுவிட கூடாது

குக்குக்கூ என கூவும் குயிலோசை


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஹா ஆஹா ஆ ஆ ஆ ஆ

நிலவுக்கு நீ என்ன இளையவளோ என் நிலவரம் தெரியாத புதியவளோ நிலவுக்கு நீ என்ன இளையவளோ என் நிலவரம் தெரியாத புதியவளோ

தலைவனை நான் நெஞ்சில் தாலாட்டுவேன் தனியிடத்தில் உன்னை பாராட்டுவேன் கொட்டும் அருவிதொட்டு தழுவி பட்ட இடத்தில் இன்றுகட்டி அணைத்தே பாடும்

குக்குக்கூ என கூவும் குயிலோசை தித்திக்கும் என் கண்ணன் குழலோசை நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ

கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து குக்குக்கூ என கூவும் குயிலோசை தித்திக்கும் உன் கண்ணன் குழலோசை