Starring | Rajinikanth, Sathyaraj, Ambika, Rajnikanth, Sharada, Raghuvaran, Goundamani, Visu, S. V. Shekhar | ||
---|---|---|---|
Music By | Ilaiyaraaja | ||
Lyric By | Vairamuthu, Pulamaipithan, Vaali, Gangai Amaran | ||
Singers | Malaysia Vasudevan, S. P. Balasubramanyam, S. Janaki | ||
Year | 1986 |
மிஸ்டர் பாரத் 1986இல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ரசினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இது அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் 1978ஆம் ஆண்டில் வெளியான திரிசூல் இந்தி திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.
ஒரு மகன், தனது தாயை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழும் தனது தந்தையை பழிவாங்கும் கதையாகும்.
இப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இணைந்து பாடிய சிறந்த வெற்றிப் பாடலான என்னம்மா கண்ணு பாடல், தனுஷ், சிரேயா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2006ஆம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் மறுஆக்கம் செய்திருந்தனர். மேலும், இப்பாடலின் முதல் வரியான என்னம்மா கண்ணு என்ற பெயரில், சத்யராஜ் நடிப்பில் 2000ஆம் ஆண்டில் வெளியானது.
Mr. Bharath is a 1986 Indian Tamil-language drama film directed by S. P. Muthuraman. The film stars Rajinikanth, Sathyaraj, Ambika, Goundamani, S. V. Shekhar and others. The film which was a remake of Hindi film Trishul revolves around a son's revenge against his father for cheating on his mother. This film was dubbed in Telugu as Nene Rajinikanth. The movie was declared a hit at the box office.
The music was composed by Ilaiyaraaja. The track "Ennama Kannu" was later remixed in the film Thiruvilayadal Arambam (2006). The song inspired a 2000 film of same name also starring Sathyaraj.