காதோரம் பாடல் வரிகள்

Starring Jiiva, Nikki Galrani
Movie Kee
Music ByVishal Chandrasekhar
Lyric By Thamarai
SingersD. Sathyaprakash, Vijay Prakash, Sinduri Vishal, Nikhil Mathew
Year 2019

Kaadhoram Song Lyrics In English

காதோரம் மூச்சு காற்று
ஒன்று ரீங்காரம் செய்யுதே
கண்ணோரம் சொப்பனங்கள்
சிந்தி பூங்காற்றில் சேருதே

அலாதியான தோற்றம்
அம் மூக்கின் மேலே சீற்றம்
விநோதமாக என்னை மாற்றுதே

ஆகாதே கண்ணை கொள்ளை
கொண்டு போகாதே முன்பிலே
தாங்காதே உன்னை பார்க்க
வேணும் வேண்டாமா கண்களே

மீறாத எல்லை மீறி
கூரான சொல்லை கூறி
நீராக உன்னை சேர பார்கிறேன்

புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

நீ தேடவேண்டும் தொலைந்து போகவா
உன் கண்ணின் ஓரம் கணவாகவா
நீ கூறும் வண்ணம் பெண்ணாக மாறவா
மாற்றத்தில் ஒன்றை மடி சேரவா


கண்ணாடி முன் நின்று நின்று
என்னை கூர்ந்து பார்கின்றேன்
நான் இல்லையே என்னாச்சுடா என்று
என்னை கேள்வி கேட்கிறேன்
வெட்கப்பட்டு வேர்க்கிறேன்

புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது
வானத்தை விட்டு தரை சேருது
நீரூற்று ஒன்று நிதானம் ஆகுது
தோள் மீது சாய்ந்து அணை போடுது

எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை
என்றேங்கி வான் தேடுது
நீ இங்குதான் உள்ள சேதி கண்டுகொண்டாடுது
விட்டு விட்டு சென்றது

புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

Kaadhoram Song Lyrics from movie Kee. Kaadhoram song sung by D. Sathyaprakash, Vijay Prakash, Sinduri Vishal, Nikhil Mathew. Kaadhoram Song Composed by Vishal Chandrasekhar. Kaadhoram Song Lyrics was Penned by Thamarai. Kee movie cast Jiiva, Nikki Galrani in the lead role actor and actress. Kee movie released on 2019