Karumathur Kaatukule

Karumathur Kaatukule Song Lyrics In English




கருமாத்தூர் காட்டுக்குள்ளே
ஒரு காலத்தில் காளியம்மன்
போல வந்தாள் பேச்சியம்மா

கருமாத்தூர் காட்டுக்குள்ளே
ஒரு காலத்தில் காளியம்மன்
போல வந்தாள் பேச்சியம்மா

சைவ சமையல் படையல் வச்சு
சருவ சட்டியில் பொங்கல் வப்பா
சாமிக்கெல்லாம் பூசை வப்பா
சங்கெடுத்து ஊதி நிற்பா

கருமாத்தூர் காட்டுக்குள்ளே
ஒரு காலத்தில் காளியம்மன்
போல வந்தாள் பேச்சியம்மா

சங்கு சத்தம் அந்த
போர்க்களத்தில் உள்ள
பேய் காமன் காதில் கேட்டது
கேட்டது கேட்டது

பொங்கலோடு பழங்களும்
சைவ படையல் வச்சு
சாமிக்கு யார் அங்கு படைப்பது
படைப்பது படைப்பது

சைவ வாடை அது
கொஞ்சமும் சகிக்கவில்லை
தாக்கி முகம் சுளிக்க வைக்குது
எங்கள் செங்கண் துடி துடிக்க
அங்கம் பட படக்க
பொங்கினானே பேய் காமனே

மாட்டு குடல் எடுத்து
மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்கு
அவன் வந்தானே

மாட்டு குடல் எடுத்து
மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்கு
அவன் வந்தானே

நான் ஆளும் பகுதியிலே
என்னென்னமோ சத்தம் தான்
நீ எழுப்பும் சத்தம் எல்லாம்
குத்தம் தான்

சத்தத்தாலே
நேத்து பூரா தூங்கல
உங்க சங்கு சத்தம்
கொட்டு சத்தம் தாங்கல

ஏழு நாளில்
இங்கிருந்து கிளம்பனும்
அட இல்லாவிட்டா
நீங்களெல்லாம் பொலம்பனும்
அச்சமூட்டி எல்லாரையும்
மிரட்டுனான் பொருளை அடிச்சு
நொறுக்கி ஆவேசமா விரட்டுனான்
விரட்டுனான் அய்யய்யயோ
விரட்டுனான்

அண்ண கொடிச்சி
அழகு மயில் பேச்சியம்மா
தன்னந் தனியே வாடுறவ
கண்ணான கழுவநாதன் கண்டு
மனம் கலங்கி நின்னு
ம்ம்ம்

அவன் உள்ளங்கை ரேகைய
ஊடுருவி பார்த்துட்டான்
ஓஹோ
புறங்கை ரேகைய
புரட்டி புரட்டி பார்த்துட்டான்
ஆஹா

உன்னை காப்பாத்த ஒரே ஒரு
ஆள விட்ட உலகத்திலே
யாரும் இல்லை
ஆமா
ஒட்டி நிற்கும் துன்பம்
எல்லாம் ஒட்டடையா
ஓட்டிடுவான் ஒருத்தனாக
ஆமா

அனாதைக்கு ஆதரவு
தருவாண்டி அவன் பேரு நான்
சொன்னேன் விருமாண்டி


விருமாண்டிய வேண்டி
வரத்தான் அங்க பேச்சியம்மா
புறப்பட்டாலே கனாந்தரம் காடு
கடந்து அந்த வண்ணயில்
புறப்பட்டாளே

எறும்பேற முடியாத
எட்டு சுத்து கோட்டைக்குள்ள
பாம்பேற முடியாதே
பத்து சுத்து கோட்டைக்குள்ளே

பெண் மற்றும்

ஆள் அரவம் இல்லாத
ஆறாம் பேய் கோட்டைக்குள்ளே
அண்ணனையும் சந்திக்க
அழகி அவள் போனாளே


ஒஹோ வெவரம்
கேட்டு விருமாண்டி
வீரம் பொங்கி கொண்டு எழுந்தானே
கன்னி பொண்ணு கதை கேட்டு
கண்ணு செவந்திட எழுந்தானே

பெத்த புள்ள துயரம் கேட்டு
பெத்தவங்க துடிப்பது போல்
பெரும் புழுதி புயல் அடிக்க
பேய் காமன் இருக்குமிடம்

பெரும் அண்டம் கிடு கிடுக்க
விருமாண்டி வந்தானே
வந்தானே வந்தானே
வந்தானே

வெண் பொங்கல்
தேங்காய் பழம் விபூதி
அதை வெறுப்பதென்ன
அர்த்தம் கேட்ட கபோதி

இது பேச்சியம்மா
குடியிருக்கும் கடலுடா
எதிர்த்து பேசினாக்கா
கிழிஞ்சு போகும் குடலுடா

மாட்டு குடலில்
மாலை போடும் பராரி
உன் முதுகில் ஏறி
செய்ய போறேன் சவாரி
சவாரி சவாரி சவாரி

இப்படி விருமாண்டி
சொன்னதும் ரெண்டு பேருக்கும்
கடுமையா சண்டை நடந்துச்சு
அப்போ பூமியெல்லாம் நடுங்குச்சு
மலை எல்லாம் ஒடஞ்சிச்சு
இதை பார்த்த சிலபேரு வீணா
எதுக்கய்யா சண்டை போடுறீங்க
சமாதானமா பேசி
தீர்த்துக்கலாம் அப்டினாங்க
அவங்களும் அதுக்கு சம்மதிச்சாங்க
அப்றம் பஞ்சாயத்தார்
தீர்ப்பு சொன்னாங்க
தொட்டப்ப நாயக்கனூர்லயும்
மதுரை மொட்டை கோபுரத்து
பக்கத்துலயும் கொடி ஒன்னு நட்டு
வைப்போம் உங்க ரெண்டு பேருல
யாரு கொடிய முதல தூக்கிட்டு
வராகளோ அவங்களுக்கு
அந்த எல்லை சொந்தம்னு
பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல
பேய்க்காமன் யோசிச்சான்
யோசிச்சு சதி ஒன்னு பண்ணுனான்
விருமாண்டி கையில நொண்டி
குதிர ஒன்னு குடுத்து
அவன் போனா எங்கடா கொடி
தூக்கிட்டு வரபோறான் நெனச்சான்
ஆகான்

மொட்டை கோபுரத்துக்கு
புறப்பட்டான் பேய் காமனும்
தொட்டப்ப நாயக்கனூர
தொட்டுட விருமான் போனான்

மொட்டை கோபுரத்துக்கு
புறப்பட்டான் பேய் காமனும்
தொட்டப்ப நாயக்கனூர
தொட்டுட விருமன் போனான்

ஏய்க்க நெனைச்சா அந்த
பேய்க்காமன் எல்லையையும்
சேர்த்தே அளந்து வந்து
ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்

அண்ணன் திரும்பி போன
இங்கே இவன் சும்மா இருப்பானா
பொண்ணுக்கு தொல்லை கொடுக்கும்
எவனும் இங்க நல்ல இருப்பானா

என்ன நானும் செய்ய
போறேன் எனக்கு ஒன்னும்
தெரியவில்லயே
அட அண்ணன்காரன் விருமன் போன
வேறும் ஏதும் வழியும் இல்லயே

அதனால என்ன பண்றதுனு
யோசிச்சு ஒரு தந்திரம்
பண்ணுனா பேச்சியம்மா
என்ன செஞ்சா

தான் விரல்ல போட்டுருந்த
மோதிரத்த கிணத்துக்குள்ள
போட்டுட்டு அண்ணன் அண்ணன்
மோதிரம் விழுந்திருச்சு எடுத்து
குடுங்க சொன்ன தங்கச்சி
வேண்டுதல நிறைவேத்த
தங்கச்சிக்காக கிணத்துக்குள்ள
குதிச்சி அந்த மோதிரத்த
எடுக்கையில கிணத்து மேலருந்த
கல்ல வெச்சு மூடி பேச்சியம்மா
விருமாண்டிய கிணத்துக்குள்ளயே
சிறை வெச்சுபுட்டா என்ன தங்கச்சி
உனக்கு உதவி பண்ண வந்த எனக்கு
இது தான்நீ காட்ற நன்றியா-னு
விருமாண்டி கேட்க
பேச்சியம்மா யோசிச்சு
தினம் தினம் அண்ணனுக்கு பூஜ
பண்ண சூலிபொண்ணும் சூலிமாடும்
கொடுக்க நம்மளால முடியுமா
கொடுத்த இந்த ஊரும் உலகும்
தான் தாங்குமா அப்டினு நெனச்சி
அண்ணன் கிட்ட சொன்னா
நீ கேட்ட மாதிரி உனக்கு
பூஜ பண்ண முடியாது
ஆனா உனக்கு நாஙக
என்ன பண்ணுவோம்னா

ஆடி கடைசி வெள்ளி
உனக்கு ஒரு பூச வைப்போம்
ஆகாச பூச வெச்சு
அப்போ படையல் வைப்போம்

ஆடி கடைசி வெள்ளி
உனக்கு ஒரு பூச வைப்போம்
ஆகாச பூச வெச்சு
அப்போ படையல் வைப்போம்

அடியேன் நீ கேட்டதெல்லாம்
ஆமாமாம் செஞ்சு வைப்போம்
அதுக்காக எங்களையே
எப்போதும் காத்திருந்து
இங்கே நீ இருக்க வேணும்
எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்

சுவாமி இங்கே நீ இருக்க
வேணும் எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்

அதுக்காக எங்களையே
எப்போதும் காத்திருந்து
இங்கே நீ இருக்க வேணும்
எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்

சுவாமி இங்கே நீ இருக்க
வேணும் எங்கும் பொங்கும்
மங்களம் தங்க வேணும்