Sengala Thookkura Thangam

Sengala Thookkura Thangam Song Lyrics In English


செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம் ஆம்பிள சிங்கம் செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம் ஆம்பிள சிங்கம்

தண்ணிக்குள்ள முங்காம முத்து வந்து சேராது சொந்த வீடு கட்டாம கண்ணு ரெண்டும் மூடாது வேட்டி துண்ட வித்துக் கூட வீட்டைக் கட்டிடுவேன்

செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம் ஆம்பிள சிங்கம்

என்னத் தொட்டதாலே என்ன கண்ட யோகம் நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம் என்னத் தொட்டதாலே என்ன கண்டே யோகம் நாலு புள்ளத்தானே நீயும் கண்ட லாபம்

லாப நஷ்டம் பாத்தாலே பொம்பளைக்கு பாவம் நீங்க வாங்கி தந்தாலே மஞ்சள் கூட லாபம்

உச்சியில் ஐஸூ வச்சது போதும் காய்ச்சல் வந்தாச்சு ஆ அட காய்ச்சல சொல்லி சாய்ஞ்சது போதும் வயசு என்னாச்சு

செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம் ஆம்பிள சிங்கம்


தண்ணிக்குள்ள முங்காம முத்து வந்து சேராது சொந்த வீடு கட்டாம கண்ணு ரெண்டும் மூடாது நான் வேட்டி துண்ட வித்துக் கூட வீட்டைக் கட்டிடுவேன்

வீடு கட்டி நீங்க பாலு காய்ச்ச வேணும் கூட வந்து நானும் தீபம் ஏத்த வேணும் வாக்கப்பட்ட நாளா நீ கேக்கலையே ஏதும் லட்டு வடை போண்டாவும் வாங்கித் தரல நானும்

பொண்ணுக்கு நாலணா மல்லிகைப்பூவே போதும் என் ராசா அந்த நாலணா பூவும் வாங்கியும் தரல துப்புக் கெட்ட ராசா இந்த துப்புக் கெட்ட ராசா

செங்கல தூக்குற தங்கம் அடி நான்தான்டி உன்னோட சிங்கம் ஆம்பிள சிங்கம்

வீடு கட்டும் முன்னால உன்னக் கொஞ்சம் கட்டிக்கிறேன் கட்டிக்கிட்ட ராசாவே கட்டளைக்கு ஒத்துக்கிறேன்

அய்யய்யோ வேணாம் கேட்டது தப்பு நாடி தளர்ந்தாச்சு உனக்கு நாடி தளர்ந்தாச்சு ஆங் ஆஹ ஹன் எனக்கு தாடி வளர்ந்தாச்சு