Vaigai Aatril Kallazhagar

Vaigai Aatril Kallazhagar Song Lyrics In English

வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா

பூங்கரகம் தலையில் வச்சு நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம் எட்டுகட்டா மெட்டெடுத்து அழகர அழகா பாடிடுவோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதத்தோம்

வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா

பூங்கரகம் தலையில் வச்சு நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம் எட்டுகட்டா மெட்டெடுத்து அழகர அழகா பாடிடுவோம்

வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா ஓஒஓ

சாமியாடி கூட்டம் கூட எதிர் சேவை மக்கள் காண பூப் பல்லாக்கில் கள்ளழகர் பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா

ஓஒஓஓஓஹோ ஓ ஓஒஓஓஓஹோ ஓ

சொக்கநாதர் மீனாட்சியின் கல்யாணத்தில் தாமதமாய் கள்ளழகர் வந்து நின்னார் கல்யாணமும் முன்பே முடிந்தய்யா

அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோவமாய் நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய்

குதிரையில் சென்ற அவர் கருடனில் திரும்பினார் கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார்

இருவர் : வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா

சித்திரையில் கள்ளழகர் சீற்றம் கொண்ட சேதி கேட்டு பட்டயத்தின்காரர்களும் சீர்பாதம் சொமந்து வாந்தாரையா

பல வித மண்டபத்தில் பத்து வித தோற்றம் கொண்டு திரு கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா

கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது

சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய் சனங்களும் விழுந்தது சேதுபதி புதுகோட்டை ராசாக்கள் பணிந்தன

இருவர் : வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா

ஓஒஓஓஓஹோ ஓ ஓஒஓஓஓஹோ ஓ

மோரு விக்க காசு இன்றி உண்டியல உடைச்சார் அய்யா அன்று முதல் கள்ளர் என்று அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்

தல்லாக்குளம் வண்டியூரு வியாருவம் காலனியில் வேட்டு சத்தம் விண் அதிர வீரமாக அழகர் ஆடி வந்தார்

பச்சை கொடி வெள்ளை பட்டில் அழகரின் ஊர்வலம் அங்கண் திருப்பதி கோழி சண்டை மாட்டு சண்டை அமர்க்களம்

பலவித செய்கை செஞ்சு வைகையிலே நீந்தினார் திட்டு என்று மூணு மாசம் படி பதினெட்டில் தூங்கினார்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா

பூங்கரகம் தலையில் வச்சு நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம் எட்டுகட்டா மெட்டெடுத்து அழகர அழகா பாடிடுவோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதத்தோம்

வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யாஓஓ