Veedu Manaivi Makkal

Veedu Manaivi Makkal Song Lyrics In English


வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல் கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதனடா அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள்

ஆயிரங் காலத்து பயிரொன்று இன்று அறுவடை ஆனது விதைத்தவன் வாழ்க்கை கண்ணீரில் நீராடுது

உதிரத்தில் பிறந்த குருவிகளெல்லாம் உறவை மறந்தது சொந்தம் இந்த வீட்டில் கடல் மீது மழையானது

ஓவியம் வாங்கி வந்தான் கண்களை காணவில்லை தேரொன்று வாங்கி வந்தான் பாதையை காணவில்லை பூஜைகள் செய்ய வந்தான் தன் கோயிலைக் காணவில்லை

வீடு மனைவி மக்கள் வீடு மனைவி மக்கள்


கூரைக்கு வாங்கிய மூங்கிலில் இன்று கொள்ளியா வைப்பது தொட்டு மட்டும் வைத்தேன் வேறென்ன நீ கண்டது

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி வாழ்க்கைத்தான் போனது ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது

கூடொன்று முடியும் முன்னே குருவி பறந்ததடா குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா பல்லவி தொடங்கும் முன்னே உன் சரணம் முடிந்ததடா

வீடு மனைவி மக்கள் மூன்றும் வாழ்வில் சிக்கல் கற்பனை கலைந்ததடா கனவுகள் முடிந்ததடா விதைப்பவன் மனிதடா அறுப்பவன் ஒருவனடா

வீடு மனைவி மக்கள் வீடு மனைவி மக்கள்