Yaarai Nondhu Kolvathinge |
---|
யாரை நொந்து கொள்வதிங்கே யாரை நொந்து கொள்வதிங்கே எனது முற்பாவ வினைகள் இருக்க யாரை நொந்து கொள்வதிங்கே எனது முற்பாவ வினைகள் இருக்க யாரை நொந்து கொள்வதிங்கே
ஊரையும் உற்றாரையும் மறந்தேன் பெற்ற தாயையும் தந்தையையும் தவிக்க விட்டேன் யாரை நொந்து கொள்வதிங்கே
தாசானு தாசனா இருப்பார் தர்மராஜனை போலவே நடப்பார் திருவாசகமே சதா படிப்பார் உபதேசங்கள் பலவும் உரைப்பார்
இந்த தேசமே பொய்யென வெறுப்பார் உண்மை நேசனைப் போலவே நடிப்பார் பின்னால் மோசமே செய்யவே நினைப்பார் கை காசையும் பறிப்பார் கண்ணீரும் விடுவார்
யாரை நொந்து கொள்வதிங்கே எனது முற்பாவ வினைகள் இருக்க யாரை நொந்து கொள்வதிங்கே நான் யாரை நொந்து கொள்வதிங்கே